Total Pageviews

Friday, April 4, 2014

பக்தி !!



வேறு சிந்தையே இல்லாமல் இறைவனிடம் கொள்கின்ற அன்பே பக்தி . பக்தி காரணமாக உலகையும் , மிகப்பிரியமான சொந்த உடலையும் கூட மறந்து விட நேருமானால் அது பிரேமை !

பக்தனின் இதய பீடம் கடவுளின் உறைவிடம் . இறைவன் எல்லா உயிர்களிலும் இருக்கிறார் எனபதில் சந்தேகம் இல்லை . ஆனால் பக்தனுடைய இதயத்தில் அவர் தம்மை சிறப்பாக வெளிப்படுத்தி அருள்கிறார் !

பக்தி யோகம் இந்த யுகத்திற்கான பாதை . இதன் மூலம் எளிதாக கடவுளை அடையலாம் . ஞானயோகம் , கர்மயோகம் ஆகியவற்றை பின்பற்றுவதாலும் நிச்சயமாக கடவுளை அடையலாம் ; என்றாலும் அவை கடினமான பாதைகள் !

நீ பைத்தியம் பிடித்தவனாக இருந்தேயாக வேண்டுமானால் கடவுளுக்காக பித்தனாக இரு !

சிறந்த பக்தன் யார் ? இறையனுபூதி பெற்று , பின்னர் கடவுளே எல்லா உயிர்களாகவும் உலகமாகவும் இருபத்துநான்கு தத்துவங்களாகவும் ஆகியுள்ளார் என்று அறிபவனே சிறந்த பக்தன் . முதலில் ஆராய்ச்சி செய்து மாடியை அடைந்து விடவேண்டும் . அதன்பிறகு , மாடி எந்தப்பொருளால் ஆக்கப்பட்டுள்ளதோ அதே செங்கல் , அதே சுண்ணாம்பு , அதே செங்கல்தூள் கொண்டுதான் படிகளும் ஆக்கப்பட்டுள்ளன என்ற காட்சி உண்டாகிறது . உயிர்கள் , உலகம் ஆகிய எல்லாமுமாக ஆகியுள்ளது அந்த இறைவனே என்பதை பக்தன் உணர்கிறான் !

யாருடைய இதயத்தில் பக்தி உணர்வு உள்ளதோ ; அவர்கள் தீர்த்த தலங்களுக்கு சென்றால் அவர்களுடைய பக்தி அதிகரிக்கிறது . பக்தி இல்லாதவர்களுக்கு தீர்த்த யாத்திரையால் என்ன பலன் ?

பக்தனாக இரு ; அதற்காக முட்டாளாக இருக்க வேண்டுமா என்ன ?